• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எண்டர்சன் மாடி வீட்டுத் தொகுதியின் "I, H மற்றும் N” கட்டடங்களின் திருத்த வேலைகள்
- எண்டர்சன் மாடி வீட்டுத் தொகுதியில் ஒவ்வொன்றும் 48 வீட்டு அலகுகள் கொண்ட "I, H மற்றும் N” ஆகிய 03 கட்டடங்களில் 144 வீட்டு அலகுகள் பொலிஸ் பரிசோதகர்களினதும் கனிஷ்ட தரத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களினதும் உத்தியோகபூர்வ இல்லங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வீடுகள் 50 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்தவையாவதோடு, விரைவில் திருத்த வேலைகளை செய்வதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.