• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய குளத்தின் போஷிப்பு குளங்களை புனரமைத்தல்
- மன்னார் மாவட்டத்தில் உள்ள பாரிய குளம் 3,800 ஹெக்டெயார்களுக்கு மேல் பரந்து காணப்படுகின்றதோடு, இதன்கீழ் 162 சிறிய போஷிப்பு குளங்கள் உள்ளன. கடந்த காலத்தில் நிலவிய மோதல் நிலமை காரணமாக மூன்று தசாப்த காலப்பகுதியினுள் பாரிய குளத்தின் கீழான போஷிப்பு குளங்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கிணங்க, 40 போஷிப்பு குளங்களின் புனரமைப்புக்குத் தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.