• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தாய்ப்பாலூட்டலை மேம்படுத்துதல், பாதுகாத்தல், ஆதரவளித்தல் மற்றும் பெயர் குறிப்பிடப்பட்ட உற்பத்திகளை சந்தைப்படுத்தல் தொடர்பிலிலுள்ள இலங்கை சட்டக்கோவைக்கு பதிலாக புதிய சட்டக்கோவையை அறிமுகப்படுத்தல்
- பிள்ளைகளின் உத்தமமான உடல் ஆரோக்கியம், போசாக்கு மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி என்பவற்றை அடைந்து கொள்வதற்கும் மந்தபோசணையை குறைத்து கொள்வதற்கும் அதேபோன்று பின்னர் வரும் வாழ்க்கை காலத்தில் தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் தாய்ப்பாலூட்டலானது வலுவாக பங்களிப்புச் செய்கின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டில் உலக சுகாதார சமவாயத்துக்கு இணங்க தாய்ப்பால் பதிலீடுகள் தொடர்பான சருவதேச விதிக்கோவையை பின்பற்றிய உலகின் முதலாவது நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என்பதுடன் உலக தாய்ப்பாலூட்டல் போக்கு முன்னெடுப்பு பற்றிய 2015 ஆம் ஆண்டிற்கான அறிக்கைக்கு இணங்க தாய்ப்பாலூட்டல் நிலையில் முதலாவது இடத்தை பெற்றுள்ளது. ஆதலால், சிசுக்களுக்கும் பிள்ளைகளுக்குமான பாலுணவு கைத்தொழில் மீதான சவால்களை எதிர்கொள்வதற்கும் வர்த்தக இணைப்பு பொருட்களை ஊக்குவிப்பதற்கும் ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழங்கங்கள் பரவுவதை தடுப்பதற்குமென வலுவான சட்ட கட்டமைப்பொன்றுடன் கூடிய புதிய சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.