• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
- 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கேற்ப, கூறப்பட்ட சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வெளியிடப்பட்ட ஏதேனும் அறிவித்தலானது, அத்தகைய அறிவித்தல் பிரசுரமான திகதியிலிருந்து 04 மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கிணங்க, சில இனிப்பூட்டப்பட்ட குடிபானங்களில் சேர்க்கப்பட்ட சீனியின் அளவின் மீது விதிக்கப்படும் உற்பத்தி தீர்வையினை திருத்தும் பொருட்டு 2079/58 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலையும், 2018 ஏப்ரல் 30 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ இலங்கை சுங்கத்திலிருந்து மோட்டார் வாகனங்களை விடுவிக்கும் நிபந்தனையை நீக்குவதற்கான 2080/31 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலையும். சிகரட் மீதான உற்பத்தி வரியினை திருத்துவதற்கான2082/11 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலையும், தற்போது வௌியிடப்பட்டுள்ள, 1,000 CC இற்கு குறைவான இயந்திர ஆற்றலைக் கொண்ட மோட்டார் வாகனங்கள் மீதான உற்பத்தி வரியினை திருத்துவதற்கான 2082/10 ஆம் 2083/2 ஆம் இலக்கங்களைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல்களையும் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.