• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்ட வரி சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்ற அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
- உள்ளூர் விவசாயிகளை பாதுகாத்தும், பல்வேறுபட்ட வரி வகைகளுக்கு பதிலாக திரட்டப்பட்ட வரியொன்றை நுகர்வோர் செலுத்துவதற்கு ஒத்தாசை புரிந்தும், அத்தியாவசிய உணவு பொருட்களின் சந்தை விலையினை நிலையாக பேணுவதற்கும் பொருட்களை பற்றாக்குறையின்றி நுகர்வோருக்கு வழங்குவதற்கும் விசேட வியாபார பண்ட வரி விகிதத்தை திருத்துவதற்கும் அதே விகிதங்களில் விசேட வியாபார பண்ட வரிக்கான காலப்பகுதியை நீடிப்பதற்குமென, 2018 மே 31 ஆம் திகதியிலிருந்து 2018 செப்ரெம்பர் 07 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெளியிடப்பட்ட எட்டு (08) வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.