• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க துறை சார்ந்த பதவியணி பற்றிய 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான அறிக்கை
- நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க துறை சார்ந்த பதவியணி பற்றிய 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான அறிக்கை அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கூறப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட தகவல்களுக்கு ஏற்ப, 2018 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டளவில் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரசுக்கு உடமையான கம்பனிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அரச துறையில் 1,370,885 பேர் பணியாற்றுகின்றனர் என்பதும் ஒருசில அரச கூட்டுத் தாபனங்களினதும் சபைகளினதும் பதவியணியிலுள்ள உத்தியோகத்தர்கள் 05 வருடங்களுக்கு கூடுதலாக முறைசார்ந்த அங்கீகாரமின்றி கருத்திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதுவும் கல்வி மற்றும் சுகாதார துறைகளில் தனியார் துறையின் பங்களிப்பானது படிப்படியாக அதிகரித்துள்ள சூழ்நிலையில் அரச துறையில் கல்வி மற்றும் சுகாதார துறைகளில் மேலதிக பதவிகளை உருவாக்குதல் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.