• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெப்பநிலை கட்டுப்பாட்டு களஞ்சியசாலை / குளிர்பதனசாலை வசதிகள் கொண்ட வலையமைப்பினை தாபிப்பதற்கு ஊக்குவித்தல்
- பழங்கள் மற்றும் மரக்கறிகளை பயிரிடுபவர்கள் அதே போன்று மீனவர்கள் மற்றும் ஏனைய சிறிய மற்றும் நடுத்தரளவு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் தீவிரமான பிரச்சினைகளுக்கு தீர்வு நடவடிக்கையொன்றாக, அத்தகைய உற்பத்தியின் விலைத்தளம்பல்களைக் குறைக்கும் நோக்குடன் உற்பத்திக்கு பின்னரான நடவடிக்கைகளில், பயிர் உற்பத்தி மற்றும் மீன்பிடி பிரதேசங்களில் வெப்பநிலை கட்டுப்பாட்டு களஞ்சியசாலை / குளிர்பதனசாலை வசதிகள் கொண்ட வலையமைப்பினை தாபிப்பதற்கான தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான கருத்திட்டமொன்றை ஆரம்பிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.