• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாராளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தை திருத்துதல்
- பாராளுமன்றத்தினதும் அதன் உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் விலக்களிப்புகளையும் அதிகாரங்களையும் பிரகடனப்படுத்தி வரையறுப்பதற்கும், பாராளுமன்றத்தில் உரையாற்றும் விவாதம் செய்யும் அல்லது நடவடிக்கைகளை தொடரும் சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்கும், பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதற்கான தண்டனையை வழங்குவதற்கும் அத்துடன் பாராளுமன்றத்தின் பத்திரங்கள், கூட்டு அறிக்கைகள், வாக்குகள் அல்லது நடவடிக்கைகள் என்பவற்றை பிரசுரிப்பதில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள ஆட்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்குமென பாராளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தை திருத்துவதற்கு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.