• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரவுசெலவுத்திட்ட விவாத நிகழ்ச்சித்திட்டம் - 2019
- 2019 நிதியாண்டுக்குரிய பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக, வரவுசெலவுத்திட்டமானது 2018 நவெம்பர் மாதம் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கும் (வரவுசெலவுத்திட்ட உரை / வரவுசெலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு) இது தொடர்பிலான விவாதம் நவெம்பர் மாதம் 07 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதிவரை மேற்கொள்வதற்கும் வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதம் (மூன்றாம் முறை வாசிப்பு) நவெம்பர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து திசெம்பர் மாதம் 08 ஆம் திகதிவரை நடாத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதென மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.