• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராமிய பாலங்களை நிருமாணித்தல்
- கிராமிய பிரதேசங்களில் போக்குவரத்து தொடர்புகளை விருத்தி செய்யும் நோக்கில் இந்த பிரதேசங்களில் சுமார் 4,000 பாலங்களை நிருமாணிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டு பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு பிரேரிப்புகள் அரசாங்கத்தினால் மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப் பேச்சு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 60 கிராமிய பாலங்களை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வரியற்ற 17.12 மில்லியன் யூரோக்கள் கொண்ட தொகைக்கு பெல்ஜியம் Janson Bridging Belgium NV கம்பனிக்கு கையளிப்பதற்கும் மேலும் 200 கிராமிய பாலங்களை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை​ வரியற்ற 50.68 மில்லியன் யூரோக்கள் கொண்ட தொகைக்கு நெதர்லாந்தின் Janson Bridging International BV கம்பனிக்கு கையளிப்பதற்குமாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.