• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாவுல நகரத்தையும் உள்ளடக்கி கண்டி - யாழ்ப்பாணம் (A9) வீதியின் 53.74 கிலோ மீற்றரிலிருந்து 58.00 கிலோ மீற்றர் வரையிலான வீதி பகுதியை புனரமைத்தலும் மேம்படுத்துதலும்
- இலங்கையின் தேசிய வீதி வலயமைப்பில் சுமார் 144 கிலோமீற்றர் புனரமைத்து மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தின் கீழ் நாவுல நகரத்தையும் உள்ளடக்கி கண்டி - யாழ்ப்பாணம் (A9) வீதியின் 53.74 கிலோ மீற்றரிலிருந்து 58.00 கிலோ மீற்றர் வரையிலான 4.26 கிலோமீற்றர் வீதி பகுதியை புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 590.62 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு Consulting Engineers & Contractors (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.