• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மின்சார விநியோகத்திற்குத் தேவையான ஏரியல் பண்டல் மின் கடத்தல் கம்பிகளை கொள்வனவு செய்தல்
- இலங்கை மின்சார சபையின் விநியோக வலயம் 02 சார்பில் தேவைப்படும் 750 கி.மீ நீளமான ஏரியல் பண்டல் மின் கடத்தல் கம்பிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s Sierra Cable PLC நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.