• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சப்புகஸ்கந்த அனல் மின் நிலையத்தின் பழைய 04 டர்போ சார்ஜர்களுக்குப் பதிலாக புதிய 04 டர்போ சார்ஜர்களை பொருத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- சப்புகஸ்கந்த அனல் மின் நிலையத்தின் பழைய 04 டர்போ சார்ஜர்களுக்குப் பதிலாக புதிய 04 டர்போ சார்ஜர்களை பொருத்துவதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஜேர்மன் M/s. MAN Diesel & Turbo SE நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.