• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மின்சாரசபையின் மின்சார விநியோகம் சார்பில் விநியோக வலையமைப்பை விருத்தி செய்வதற்குத் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல்
- இலங்கை மின்சாரசபையின் மின்சார விநியோக வலையமைப்பை விருத்தி செய்வதற்கு அதன் விநியோக நிலையங்களுக்கு 25,000 மின்மானி வாசிப்புக் கருவிகள் மற்றும் மோடங்கள் மற்றும் 75,000 மின்மாற்றிகள் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு முறையே சீனாவின் M/s. Shenzeng Kaifa Technology Co. Ltd நிறுவனத்திற்கும் M/s. Shenzhen Chuangyin Co. Ltd நிறுவனத்திற்கும் வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.