• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொறட்டுவை லுனாவை வைத்தியசாலையை நவீனமயப்படுத்துதல்
- மொறட்டுவை லுனாவை வைத்தியசாலை மொறட்டுவை பிரதேச மக்களுக்கு சுகாதார சேவையினை வழங்கும் விசேட பணியினை மேற்கொள்கின்றது. இந்த வைத்தியசாலையை நவீனமயப்படுத்துவதன் கீழ் வௌிவாரி நோயாளர் பிரிவொன்றையும் கிளினிக் கட்டடமொன்றையும் நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை துரிதமாக செய்து கொள்ளும் பொருட்டு 1,035 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு மத்திய பொறியியல் உசாத்துணை பணியகம் / பொறியியல் சேவைகள் தனியார் கம்பனி ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.