• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழில்பயிற்சி நிலையத்தை பிட்டபெத்தரவில் நிருமாணித்தல்
- NVQ - 4 தகைமை மட்டத்தில் [க.பொ.த (உ/த) இற்கு சமமானது] சமையல், வெதுப்பகம் மற்றும் தொடர்புபட்ட உற்பத்திகள், மோட்டார் வாகன தொழினுட்பம் மற்றும் அழகுக்கலை தொடர்பான கற்கைநெறிகளை நடாத்துவதற்கு ஏதுவாக 200 மில்லின் ரூபா கொண்ட முதலீட்டினைக் கொண்டு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கி தொழில்பயிற்சி நிலையமொன்றை பிட்டபெத்தரவில் தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், இந்த நோக்கத்திற்குத் தேவையான நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.