• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ருகுணு பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தை தாபிப்பதற்கான சட்ட வரைவு சட்டமூலம்
- தெற்கு பிராந்தியத்தில் ஏற்றுமதி நோக்கிய விசேட பொருளாதார வலயங்களை தாபித்தல் தொடர்பில் விசேட கவனத்தைச் செலுத்தி தெற்கு பிராந்தியத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக ருகுணு பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தை தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், இந்த நோக்கம் கருதி அவசியமான சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.