• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மக்கள் சீன குடியரசின் சீன விஞ்ஞான அக்கடமியுடன் செய்துகொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை
- ஆயுள், கடல், புவி, சுற்றாடல் மற்றும் ஏனைய விஞ்ஞான துறைகளில் விஞ்ஞானம் மற்றும் தொழினுட்ப ஆராய்ச்சி செயற்பாடுகள் மீதான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இவ்விரு நாடுகளுக்குமிடையில் விஞ்ஞான ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் தொழினுட்ப அபிவிருத்திக்காக வழங்கப்படவுள்ள வசதிகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பிரேரிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.