• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா' நிகழ்ச்சித் திட்டம் - உற்பத்தி வடிவமைப்பு நிருமாண பொறியியல் கம்பனிகளுக்கான சலுகை கடன் திட்டம்
- உற்பத்தி வடிவமைப்பு நிருமாண பொறியியல் துறையில் ஈடுபட்டுள்ள கம்பனிகளுக்கு உள்நாட்டு மற்றும் சருவதேச உற்பத்திகளை வடிவமைத்தல் மூலமுன்மாதிரிகளை உருவாக்கல் மற்றும் வர்த்தகமயப்படுத்தல் சார்பில் நீண்டகால சலுகை நிபந்தனைகளுடன் கடன் வசதிகள் 'என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கக்கூடிய சாத்தியம் பற்றி ஆராய்ந்து அதற்கிணங்க, நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இயந்திர - மின்னணுவியலை பலப்படுத்தும் பொருளாதார அபிவிருத்தியை ஆரம்பிக்கும் கம்பனிகளுக்கு சலுகை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் புதிய கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.