• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைக்கடன் வசதிகளை விரிவுபடுத்துதல்
- 'என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் சலுகைக்கடன் திட்டங்களின் நலன்களை, தற்போது தொழினுட்ப துறையில் ஈடுபட்டுள்ள தேசிய தொழில்சார் தகைமைகள் (NVQ) 5, 6 மற்றும் 7 மட்டங்களை பூர்த்தி செய்துள்ள தொழில்சார்பாளர்கள், சிறிய அளவிலான கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுபவர்கள் உக்கும் பொருட்களைப் பயன்படுத்தி பல்வேறுப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்குத் தேவையான முதலீடுகளை எதிர்பார்ப்பவர்கள் ஆகியோர் களுக்கும் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் விரிவு படுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.