• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச சிவில் விமான சேவைகள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளை தடைசெய்தல் சம்பந்தமாக புதிய சட்டமொன்றை வரைதல்
- சருவதேச சிவில் விமான சேவைகள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளை தடைசெய்தல் சம்பந்தமாக இதற்கு முன்னர் செய்து கொள்ளப்பட்டுள்ள மொன்றியல் சமவாயம் சருவதேச சிவில் விமான பயணங்களுக்கு சேவை வழங்கும் விமான நிலையங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான ஆரம்ப வரைவு உடன்படிக்கை ஆகிய சருவதேச சமவாயங்களை மேலும் இற்றைப்படுத்துவதற்கும் மேலும் பலப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் தற்போது நடைமுறையிலுள்ள 1996 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க சிவில் விமான சேவைகளின் பாதுகாப்புக்கு எதிரான சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.