• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய அமெரிக்காவின் Millennium Challenge Corporation நிறுவனத்திற்கும் இடையிலான உடன்படிக்கை
- 'Millennium Challenge' உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக இனங்காணப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களிலிருந்து போக்குவரத்து மற்றும் காணி ஆகிய துறைகள் சார்ந்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 'Millennium Challenge Account (Guarantee Company) Sri Lanka' என்னும் கம்பனியொன்றைத் தாபிப்பதற்கும் இதற்குத் தேவையான ஏனைய வசதிகளை வழங்குவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.