• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்
- 2019 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்றோபர் மாதம் இரண்டம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2019-2021 நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பின் கீழ் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவுசெலவுத்திட்டத்தை தயாரிக்கும் கொள்கைசார் முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டும் நிலவும் வளங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டும் இந்த மதிப்பீடானது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.