• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு வீதி இணைப்பு கருத்திட்டத்தின் கீழ் வீதிகளை புனரமைத்தலும் மேம்படுத்தலும்
- தெற்கு வீதி இணைப்பு கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்கள் பூர்த்தியானதன் பின்னர் மீதி நிதியங்களைப் பயன்படுத்தி, கொழும்பு - இரத்தினபுரி வீதியில் ஹோமாகமவிலிருந்து பனாகொட வரையான 1.90 கிலோமீற்றர் நீளம் கொண்ட வீதிப்பகுதி, கொழும்பு - இரத்தினபுரி வீதியில் பனகொடயிலிருந்து கொடகம சந்தி வரையான 2.16 கிலோமீற்றர் நீளம் கொண்ட வீதிப்பகுதி, பாமன்கடை - ஹொரண வீதியில் டபிள்யு.ஏ. த சில்வா மாவத்தையிலிருந்து பாமன்கடை வரையான 0.58 கிலோமீற்றர் நீளம் கொண்ட வீதிப்பகுதி அத்துடன் பாமன்கடை - ஹொரண வீதியில் பிலியந்தலை நகரத்திலுள்ள 2.95 கிலோமீற்றர் நீளம் கொண்ட வீதிப்பகுதி ஆகிய 04 வீதிப்பகுதிகளை புனரமைத்து மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, மேல் குறிப்பிடப்பட்டுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.