• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொஹூவெல, கெட்டம்பே மற்றும் ஹீரஸ்ஸகல ஆகிய இடங்களில் மேம்பாலங்களை நிருமாணித்தல்
- கொஹூவெல, கெட்டம்பே மற்றும் ஹீரஸ்ஸகல ஆகிய இடங்களில் மூன்று (03) மேம்பாலங்களை நிருமாணிப்பதற்கும் 58.68 மில்லியன் யூரோ கொண்ட முதலீட்டைக் கொண்டும் ஹங்கேரி அரசாங்கத்தின் நிதி உதவியினைக் கொண்டும் ஹங்கேரி அரசாங்கத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள Betonutepito Plc நிறுவனத்துக்கு கூறப்பட்ட நோக்கத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்குமென நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.