• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு 02, யூனியன் பிளேஸ், முதலிகே மாவத்தையிலுள்ள காணியினை M/s. Access Realities (Pvt) Ltd. கம்பனிக்கு குத்தகைக்களித்தல்
- அபிவிருத்தி கருத்திட்டம் ஒன்றுக்கு பயன்படுத்தும் பொருட்டு கொழும்பு 02, யூனியன் பிளேஸ், முதலிகே மாவத்தையில் அமைந்துள்ள, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான 114.56 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணம் கொண்ட காணித் துண்டொன்றை, உரிய பெறுகையின் பொருட்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, குத்தகை அடிப்படையில் 99 வருட காலப்பகுதிக்கு 1,117.20 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு M/s. Access Realities (Pvt) Ltd. கம்பனிக்கு உடைமையாக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.