• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழான உட்கட்டமைப்பு அபிவிருத்தி
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் நல்லூர், கட்டுடை, வட்டுக்கோட்டை, புங்குடுத்தீவு, காரைநகர், நாவற்குழி, புத்தூர், பூநகரி, மீசாலை, கொடிகாமம், பளை, கரவெட்டி, புணரி, பொக்கணை மற்றும் வேலணை பிரதேசங்களில் நீர்விநியோக முறைமை வலையமைப்புக்களை வழங்கி பதித்தலும் மற்றும் உரிய ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதற்குமான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் செய்யப்பட்டுள்ளவாறு M/s. Sierra Construction (Pvt.) Ltd., நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.