• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹிங்குரக்கொடையில் தேசிய தொழிற்பயிற்சி நிலையமொன்றைத் தாபித்தல்
- கிராமிய இளையோருக்கு தொழிலில் ஈடுபடக்கூடிய திறன்களை வழங்கும் நோக்குடன் ஹிங்குரக்கொடையில் தேசிய தொழிற்பயிற்சி நிலையமொன்றைத் தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால் 35 மில்லியன் யூரோ கொண்ட தொகையில் நெதர்லாந்தின் M/s. Gemco International BV நிறுவனத்துக்கு மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.