• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல்
- மோதல் நிலவிய பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு, அதன் கீழ் தற்போது 137 சதுர கிலோமீற்றர்கள் வரை அகற்றப்பட்டு மீள குடியமர்த்தும் நோக்கத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மேலும் 28 சதுர கிலோமீற்றர் பிரதேசத்துக்கு இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் 2020 ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளில் ஈடுபடும் இலங்கை தரைப்படையின் கண்ணிவெடிகளை அகற்றும் பிரிவுக்குத் தேவையான வசதிகளை வழங்கும் பொருட்டு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.