• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவராண்மையின் ஆராய்ச்சி பிரிவுக்கு ஆய்வுகூட உபகரணங்களை வழங்குதல்
- தேசிய மற்றும் சருவதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை விளையாட்டு வீர வீராங்கனைகள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகும் ஆபத்தினை குறைத்து விளையாட்டின் தன்மையினை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவராண்மையின் ஆராய்ச்சி பிரிவுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கும் பொருட்டு மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.