• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்தல்
- தற்போது எந்தவித உற்பத்தி பணிகளையும் மேற்கொள்ளாத எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையில் உள்ள இயந்திர சாதனங்களையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் நவீனமயப்படுத்தியதன் பின்னர் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு Korean SPA நிறுவனம் பிரேரிப்பொன்றை சமர்ப்பித்துள்ளது. இதற்கமைவாக, 1,200 மில்லியன் ரூபா முதலீட்டில் பொதியிடல் கடதாசிகளை உற்பத்தி செய்வதற்காக இந்த தொழிற்சாலையை Korean SPA நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.