• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதிச் சட்டமூலத்தை திருத்துதல் - 2018
- அரசாங்கத்தினால் 2016 ஆம் 2017 ஆம் 2018 ஆம் ஆண்டுகள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டங்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு வசதிகளை செய்வதற்கான நிதிச் சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பிரேரிப்புகளை நடைமுறைப் படுத்தல் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து இந்த பிரேரிப்புகளை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியமையினால் இந்த திருத்தங்களை நிதி சட்டமூலத்திற்கான பாராளுமன்ற குழுநிலை சந்தர்ப்பத்தில் சேர்ப்பது பொருத்தமானதென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பல்வேறுப்பட்ட வரிகளை திருத்துவதற்கும் வரி அறவிடுவதன் பொருட்டில் அமுலுக்கு வரும் திகதிகள் உட்பட ஏனைய நிருவாக ஏற்பாடுகளையும் திருத்துவதற்குமாக நிதி சட்டமூலத்தை திருத்துமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.