• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் முதியோர் பராமரிப்பு வசதிகளை வலுப்படுத்தல் (விடய இல.09)
- 2041 ஆம் ஆண்டளவில் இலங்கையின் முதியோர் சனத்தொகை தற்போது நிலவும் அளவினைவிட இருமடங்காக அதாவது, மொத்த சனத்தொகையின் சுமார் 24.8 சதவீதமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், முதியோரின் சமூக பாதுகாப்பு தொடர்பில் முறையான வழிமுறைகளுக்கான அணுகுகைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழியாக குடும்பங்களுடன் இருக்கும் முதியோர்களுக்கு பகற்பொழுது பாதுகாப்பு இல்லங்கள், குடும்ப உறுப்பினர்கள் இல்லாத முதியோர்களுக்கு நிரந்தர தங்குமிட இல்லங்கள், கடுமையாக அங்கவீனமுற்ற அல்லது இயலாமையினால் படுக்கையிலுள்ள முதியோர்கள் சார்பில் அரசாங்க வைத்தியசாலைகளில் நிபுணத்துவ மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் காவறைகளை தாபிக்கும் முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் முதியோர் உபசரிப்பு சேவை சார்பில் அதிகரித்துவரும் கேள்விக்கு ஏற்றவிதத்தில் சுமார் 10,000 முதியோர் உபசரிப்பு சேவை வழங்குபவர்களை பயிற்றுவிப்பதற்கும் தேவையான நிகழ்ச்சித்திட்டங்ளை நடைமுறைப்படுத்துவதற்கும் இவற்றுக்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.