• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெண்களுக்கு தொழினுட்ப மற்றும் வாழ்க்கை தொழிற்கல்வி மற்றும் பயிற்சி துறையில் வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்துதல்
- தொழினுட்ப மற்றும் வாழ்க்கை தொழிற்கல்வி மற்றும் பயிற்சி துறையில் பயிற்சி பெறும் பெண் பயிற்சியாளர்களுக்கிடையே சுயதொழில்களை மேம்படுத்துதல் இதுவரை ஆண்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள தொழில் துறைகளுக்கு பெண்களை ஈடுபடுத்துதல் அதிகரித்து வரும் தொழில் வாய்ப்புகளுக்கு பெண்கள் செல்வதை விரிவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளைச் செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கொடையாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக உரிய கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு Plan International Australia நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.