• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
படகு கட்டும் தொழிலுக்கான ஒழுங்குறுத்துகை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை செய்தல்
- இலங்கையில் படகு கட்டும் தொழிலை விருத்தி செய்யும் நோக்கில் அதன் பொருட்டு ஒழுங்குறுத்துகை கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் தற்போது படகு கட்டும் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தொழிலை நடாத்திச் செல்வதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமான நோக்கில் வெலிகம, கப்பரதொட்ட பிரதேசத்திலுள்ள படகு செலுத்தும் இடம், சறுக்கல் வழி மற்றும் திருத்தவேலை வசதிகளின் நிருமாணிப்பு உட்பட, அணைக்கரை என்பன பொருட்டு சாத்தியத்தகவாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைவாக, இந்தக் கருத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.