• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கடற்றொழில் மற்றும் நீர் வாழ் உயிரின செய்கை கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சட்டமூலமொன்றை வரைதல்
- தற்போது நடைமுறையிலுள்ள 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தேசிய கடற்றொழில் மற்றும் நீர்வளமூல சட்டமானது பல சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளதோடு, தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் போக்குகளுக்கு அமைவாக இந்த சட்டத்தை மேலும் திருத்த வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக கடற்றொழிலின் ஒழுங்குறுத்துகை பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி போன்றவற்றுக்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி புதிய சட்டமொன்றை வரையும் பொருட்டு கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.