• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபையின் வருமான நிலையை விருத்தி செய்து கொள்வதற்காக 2005 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க இலங்கை போக்குவரத்து சபை சட்டத்தைத் திருத்துதல்
- இலங்கை போக்குவரத்து சபைக்கு கிடைக்க வேண்டிய நாளாந்த வருமானத்தில் கணிசமான அளவு பல்வேறுபட்ட முறைக்கேடான நடவடிக்கைகளினால் இல்லாமற் போகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலைமையை தடுப்பதன் மூலம் அதன் வருமான நிலையை விருத்தி செய்து கொள்வதற்குத் தேவையான திருத்தங்களை உள்ளடக்கி 2005 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க இலங்கை போக்குவரத்து சபை சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.