• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்த ஜயந்தி திரிபீடக நூல் தொகுப்பின் மீள் பதிப்பினை புத்தசாசன அமைச்சின் ஊடாக மேற்கொள்தல்
- 2500 புத்த ஜயந்தியை நினைவுகூர்வதற்காக சார்பில் பாளி மொழியிலுள்ள திரிபீடக நூல் தொகுப்பை சிங்கள மொழியில் மொழி பெயர்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, 1980 ஆம் ஆண்டளவில் இந்த நூல் தொகுப்பின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. எதிர்காலத்தில் இந்த நூல் தொகுப்பை முறையான விதத்தில் அச்சிட்டு வௌியிடுவதற்கு புத்தசாசன அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, திரிபீடக நூல் தொகுப்பை பதிப்பித்து அச்சிடும் பொறுப்பினை புத்தசாசன அமைச்சுக்குப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.