• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய நீதியான சமூகமொன்றின் பொருட்டிலான நிலைபேறுடைய புண்ணிய கிராம நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப் படுத்துதல்
- "கமய் பன்சலை" என்னும் நோக்கத்தை பலமிக்கதாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய நீதியான சமூகமொன்றின் பொருட்டிலான நிலைபேறுடைய கிராமத்தை கட்டியெழுப்பும் நோக்கில் விகாரைகளை மையமாகக் கொண்ட நிலைபேறுடைய புண்ணிய கிராம நிகழ்ச்சித்திட்டமானது புத்தசாசன அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் தற்போது சமூகத்தில் அருகிவரும், பண்டைய காலம் தொட்டு பின்பற்றப்பட்ட பௌத்த ஒழுக்க விழுமியங்கள், வழக்கங்கள், கலாசார பாரம்பரியங்கள் என்பவற்றுக்கு அமைவாக கிராமத்தில் அமைந்துள்ள விகாரையை முன்னிலைப்படுத்தி மக்களின் வாழ்க்கையானது ஒழுங்குபடுத்தப்படுகின்றது. இதற்கிணங்க, கடந்த ஆண்டில் 50 கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றியினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, எதிர்வரும் ஆண்டில் நாட்டின் சகல மாவட்டங்களையும் தழுவும் விதத்தில் 250 கிராமங்களில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேவையான நிதியேற் பாடுகளை பெற்றுக் கொள்வதற்கும் ஏனைய மத வழிப்பாட்டு தலங்களை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய அமைச்சுக்களுக்கு அறிவிப்பதற்குமாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.