• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மட்டக்களப்பு பொது நூலக கட்டடத்தின் நிர்மாண வேலைகளை பூர்த்தி செய்தல்
- மட்டக்களப்பு பொது நூலகம் நடாத்திச் செல்லப்படும் 50 வருடங்கள் பழமை வாய்ந்த கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடமொன்றை நிருமாணிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த கட்டடத்தின் வேலைகளை பூர்த்தி செய்வதற்கு மேலும் தேவைப்படும் 169.97 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதியேற்பாட்டினை 2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.