• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடுத்தர வருமானம் பெறும் வீடமைப்பு கடன் திட்டம்
- நடுத்தர வருமானம் பெறும் வீடமைப்பு அபிவிருத்தி கருத்திட்டத்திலிருந்து முதற்தடவையாக வீடொன்றினை கொள்வனவு செய்யும் அரசாங்க மற்றும் தனியார் ஆகிய இரண்டு துறைகளிலும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு அதன் பொருட்டு தேசிய சேமிப்பு வங்கியினூடாக சலுகை கடனொன்றை பெற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் நடுத்தர வருமானம் பெறும் வீடமைப்பு கடன் திட்டமொன்றை விரிவுப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்தக் கடன் திட்டத்திற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பிருந்த வயதெல்லைக்கு பதிலாக வங்கிகளினால் வீடமைப்பு கடன் வழங்கும் போது பொதுவாக பின்பற்றப்படும் வயதெல்லையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தனியார் துறையினூடாக செயற்படுத்தப்படும் வீடமைப்பு கருத்திட்டங் களிலிருந்தும் வீடுகளை கொள்வனவு செய்வதற்கு இயலுமாகும் வகையிலும் அதிகளவில் பயனாளிகளுக்கு சலுகை வழங்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்குரியதாக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் பிரேரிக்கப்பட்டவாறு இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு தகைமை பெறுவதற்குரிய மாதாந்த வருமான மட்டத்தை குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.