• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசளை கொள்வனவு
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப் பட்டுள்ளவாறு, ஒக்ரோபர் மாதத்திற்கான இரசாயன பசளை கொள்வனவு கருதி Ceylon Fertilizer Company Limited நிறுவனத்தினாலும் Colombo Commercial Fertilizer Company Limited நிறுவனத்தினாலும் தேவைப்படுத்தப்படும், 38,500 மெற்றிக் தொன் யூரியாவை (சிறுமணிகள்) மெற்றிக் தொன் ஒன்றுக்கு 309.60 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் Liven Agrichem Pte. Ltd., நிறுவனத்திடமிருந்தும் 20,000 மெற்றிக் தொன் மியுரியேட் ஒப் பொட்டாஷ் மெற்றிக் தொன் ஒன்றுக்கு 329.50 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்திலும் 7,500 மெற்றிக் தொன் ரிபிள் சுப்பர் பொஸ்பேட்டை மெற்றிக் தொன் ஒன்றுக்கு 317.25 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் Agri Commodities and Finance நிறவனத்திடமிருந்தும் கொள்வனவு செய்வதற்கான அங்கீகாரம் கருதி கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.