• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீரிகம நீர்வழங்கல் கருத்திட்டம்
- மீரிகம, கல்எலிய, கண்டலம மற்றும் உத்தேச மீரிகம கைத்தொழிற்பேட்டையின் ஒரு பகுதிக்கு நீர் வழங்கும் பொருட்டு மீரிகம நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டம் சம்பந்தமாக M/s China Aero Technology International Engineering Corporation (CATIC) நிறுவனத்தினால் சாத்தியத்தகவாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நிறுவனத்தினால் கருத்திட்ட பிரேரிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரிப்பினை மதிப்பிடுவதற்காக குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.