• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கருத்திட்ட நடைமுறைப்படுத்தல்களை துரிதப்படுத்துவதற்கு அமைச் சரவையினால் நியமனஞ் செய்யப்படும் நிலையியல் இணக்கப்பேச்சுக் குழுவொன்றைத் தாபித்தல்
- அபிவிருத்தி கருத்திட்டங்கள் அடங்கலாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்காக பெறுகை தொடர்புற்ற தீர்மானங்களை எடுக்கும் நடவடிக்கையினை துரிதப்படுத்தும் பொருட்டு இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள், பிரதான நிதி உத்தியோகத்தர்கள் போன்ற சிரேட்ட மட்டத்திலான உத்தியோகத்தர்களை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் நிலையியல் இணக்கப் பேச்சுக் குழு உறுப்பினர்களாக நியமிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.