• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலா மேம்பாட்டுக்கான டிஜிட்டல் விளம்பர பிரசார திட்டம்
- ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உல்லாச பயணிகளுக்கிடையே இலங்கையை கவர்ச்சிகரமான அமைவிடமொன்றாக ஊக்குவிப்பதற்கு டிஜிட்டல் பிரசார நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவை யினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்தியா மற்றும் சீனா என்பவற்றுக்கான டிஜிட்டல் பிரசார நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டிலான ஒப்பந்தங்களை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினதும் சிபாரிசின் பிரகாரம் முறையே Havas Media India Private Limited கம்பனிக்கும் M/s Ionic Media நிறுவனத்துக்கும் வழங்கும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.