• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புவியியல்சார் பெயர்களின் தரப்படுத்தலுக்கு முறையொன்றை அறிமுகப்படுத்துதல்
- இலங்கையில் அரசகரும மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளானவை ரோம முறையற்ற எழுத்துக்களைக் கொண்டுள்ளன. சிங்களம் மற்றும் தமிழ் பெயர்களில் அழைக்கப்படும் இலங்கையிலுள்ள கிராமங்கள், நகரங்கள், ஆறுகள் போன்றவற்றின் புவியியல் ரீதியிலான பெயர்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதும் போது செம்மையான சிங்கள / தமிழ் உச்சரிப்பு அவ்வாறே பதியப்படாமையினால் செம்மையான உச்சரிப்பினைக் குறிப்பிடும் விதத்தில் தரப்படுத்தப்பட்ட வழிமுறையொன்றுக்கு அமைவாக ஆங்கில எழுத்துக்களில் எழுதுவது ரோம முறையென அழைக்கப்படும். இந்த முறையானது ஏற்கனவே தமிழ் மொழியிலுள்ள புவியியல் பெயர்களை எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சிங்கள மொழியில் புவியியல்சார் பெயர்களை எழுதும் போது குறித்த பெயர்களை சருவதேச ரீதியிலும் பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் ரோம முறை யினை சிங்கள மொழி சார்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ரோம முறையொன்றாக ஐக்கிய நாடுகளின் தரப்படுத்தல் பற்றிய மாநாட்டிற்கு முன்மொழிவதற்குமாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.