• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1993 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க தேயிலை ஆராய்ச்சி சபை சட்டத்தை திருத்துதல்
- 1993 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க தேயிலை ஆராய்ச்சி சபை சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை வகுத்தமைக்கும் சபையின் பணியினை விரிவுபடுத்துதல், ஆராய்ச்சி முடிவுகளை பல்வேறுப்பட்ட தரப்புகளுக்கு வழங்குதல் தொடர்பில் திட்டவட்டமான ஏற்பாடுகளை சேர்த்தல், தேயி​லை ஆராய்ச்சி சபை சட்டத்திற்கும் உரிய வேறு சட்டங்களுக்கும் இடையிலான ஒவ்வாமையை தவிர்ப்பதற்கு ஏற்பாடுகளை செய்தல் மற்றும் தேயி​லை ஆராய்ச்சி சபையின் பணிப்பாளர் சபை கட்டமைப்பை மாற்றுதல் என்பன பொருட்டிலான திருத்தங்களை உள்ளடக்கி ஆக்கப்பட்டுள்ள சட்டமூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.