• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் நுவரெலிய பிராந்திய அலுவலகத்திற்கு நிரந்தர கட்டட வசதிகளை வழங்குதல்
- சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் நுவரெலிய பிராந்திய அலுவலகம் தற்போது நடாத்திச் செல்லப்படும் குத்தகை கட்டடத்திற்கு பதிலாக நிரந்தர கட்டட வசதிகளை வழங்கும் நோக்குடன் இந்த அலுவலகத்தை கொத்மலை புதிய நகரத்தில் 0.0452 ஹெக்டயார் விஸ்தீரணம் கொண்ட காணித்துண்டொன்றில் அமைந்துள்ள பழைய கட்டடமொன்றை புனரமைத்து அங்கு தாபிப்பதற்கும் அதன் பொருட்டு தேவைப்படும் நிதியினை ஒதுக்குவதற்கும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.