• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை திருத்துதல்
- நடைமுறை போக்கு மற்றும் தேவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கைக்கான உலக வங்கியின் வியாபாரங்களை நடாத்திச் செல்வதற்கான வசதி பற்றிய தரப்படுத்தல் சுட்டெண்ணில் உயர் தரப்படுத்தலை அடைவதற்கு ஏதுவாய் அமையும் விதத்தில் புதிய கம்பனியொன்றை கூட்டிணைப்பது தொடர்பில் பொது மக்களுக்கு அறிவிப்பதற்கு பதிவாளருக்கு இயலுமாகும் வகையிலும் கம்பனியொன்றின் பெயரை மாற்றுவதற்கு குறித்த கம்பனிக்கு கட்டளையிடுவதற்கு கம்பனிகள் பதிவாளருக்கு இயலுமாகும் வகையிலும் இந்த சட்டத்தின் 5 ஆம் 9 ஆம் 10 ஆம் பிரிவுகள் சார்பில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.