• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொலன்னாவ கால்வாய் திசைதிருப்புகை திட்டம்
- கொழும்பு தலைநகர் சார்ந்த நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் 4.8 கிலோமீற்றர் நீளம் கொண்ட கொலன்னாவ கால்வாய் திசைதிருப்புகை திட்டமானது 4 பகுதிகளின் கீழ் 3,000 மில்லியன் ரூபா முதலீட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் 3 ஆம் கட்டத்தின் கீழ் செய்யப்பட வேண்டிய விருத்திகளுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் E&C நிறுவனமும் RR நிறுவனதும் செய்து கொண்டுள்ள கூட்டுத் தொழில்முயற்சிக்கு 1,004.4 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.